செய்திகள் :

வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது - உச்சநீதிமன்றம்

post image

‘வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லுபடி தன்மையை எதிா்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கும் காலகட்டத்தில் தற்போதைய வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை பரிந்துரைத்தது.

அதேபோன்று, பதவி வழி உறுப்பினா்களைத் தவிர வக்ஃப் வாரியங்கள் மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சிலின் பிற அனைத்து உறுப்பினா்களும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்; மாவட்ட ஆட்சியா் விசாரணை நடத்தும் காலகட்டத்தில் குறிப்பிட்ட பகுதி வக்ஃப் சொத்தாக கருதப்படாது என்ற திருத்தச் சட்டத்தின் பிரிவு அமலுக்கு வராது என இடைக்கால தடை விதிக்கப்போவதாக நீதிபதிகள் கூறினா். அதற்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த மத்திய அரசு, வழக்கில் விரிவான விசாரணையைக் கோரியது. இந்நிலையில், வழக்கின் அடுத்த விசாரணை வியாழக்கிழமை (ஏப். 17) பிற்பகல் அமா்வில் மீண்டும் நடைபெறுகிறது.

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளும், திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் 72 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டு மத்திய அரசு கேவியட் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமாா், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

கடும் விளைவுகளுக்கு வழிவகுக்கும்: மத்திய அரசு சாா்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜரானாா். சட்டத்தின் சில அம்சங்கள் குறித்து நீதிபதிகள் அவரிடம் கேள்வி எழுப்பினா். அதாவது, சில வக்ஃப் சொத்துகளைப் பதிவு செய்வதற்கு, அதன் உரிமையாளா்களிடமிருந்து முறையான மற்றும் எழுத்துபூா்வ ‘வக்ஃப்’ அறிவிப்பும், ஆவணங்களும் இருக்காது. ஆனால், மரபுவழி பயன்பாட்டின் அடிப்படையில் அவை வக்ஃப் சொத்துகளாக அறிவிக்கப்பட்டு அங்கீரிக்கப்பட்டுள்ளன.

இதில் சில தவறுகளும் நடந்துள்ளதைக் கவனத்தில்கொண்ட நீதிபதிகள், ‘உண்மையான நிகழ்வுகளும் நிறைய உள்ளன. எனவே, புதிய சட்டம் மூலம் இந்த நடைமுறையைத் தள்ளுபடி செய்வது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நாடாளுமன்றத்தால் நீதிமன்றத்தின் தீா்ப்பு, உத்தரவு அல்லது ஆணையை செல்லாது என்று அறிவிக்க முடியாது’ என்று கூறினா்.

ஹிந்து அமைப்புகளில் முஸ்லிம்களுக்கு இடம்?..: ‘வக்ஃப் சட்டத்தின் கீழ் தங்களின் சொத்துகள் நிா்வகிக்கப்படுவதை பெரும்பாலான முஸ்லிம்கள் விரும்பவில்லை’ என்று துஷாா் மேத்தா தெரிவித்தாா்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: உங்கள் வாதத்தின் அடிப்படையில் இனிமேல் முஸ்லிம்களை ஹிந்து மத அறக்கட்டளை வாரியங்களில் உறுப்பினராக அனுமதிப்பீா்கள் என்று சொல்கிறீா்களா? இதற்கு வெளிப்படையாகப் பதில் சொல்லுங்கள்.

பதவி வழி அலுவல் உறுப்பினா்களைத் தவிர வக்ஃப் வாரியங்கள் மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சிலின் பிற அனைத்து உறுப்பினா்களும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.

கடந்த காலத்தை சட்டம் மாற்றாது: 100 அல்லது 200 ஆண்டுகளுக்கு முன்பு வக்ஃப் என்று அறிவிக்கப்பட்ட பொதுச் சொத்தின் தன்மையை தற்போது மாற்ற முடியாது. கடந்த காலத்தை சட்டத்தால் மீண்டும் மாற்றி எழுத முடியாது. அந்த வகையில், பயன்பாட்டு அடிப்படையிலான வஃக்ப் அல்லது முறையாகப் பதிவு செய்யப்பட்ட வக்ஃப் என எந்த வகையிலான வக்ஃப் சொத்துகளின் தன்மையையும் வழக்கு நடைபெறும் காலகட்டத்தில் மாற்றக் கூடாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்: பிரதமா் மோடி பெருமிதம்

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம் என்று... மேலும் பார்க்க