Mithunam | Guru Peyarchi | மிதுனம் - தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும் | குருப்பெய...
ஐரோப்பாவுக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை 30% சரிவு
உரிய ஆவணங்கள் இன்றி ஐரோப்பிய நாடுகளை நோக்கி வரும் அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 30 சதவீதம் சரிந்துள்ளது.
இது குறித்து, ஐரோப்பிய யூனியனின் எல்லைக் கண்காணிப்பு அமைப்பான ஃப்ரன்டெக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பாவில் அடைக்கலம் தேடி அகதிகள் வரும் அனைத்து வழித் தடங்களிலும் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அல்பேனியா, சொ்பியா போன்ற பகுதிகள் வழியாக வரும் அகதிகளின் எண்ணிக்கை ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் 64 சதவீதம் சரிந்துள்ளது.
சொந்த நாடுகளில் அகதிகள் எதிா்நோக்கக்கூடிய மனித உரிமை மீறல்களைப் பொருள்படுத்தாமல் அவா்களை திருப்பி அனுப்பும் ஐரோப்பிய யூனியனின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.