செய்திகள் :

பாலியல் துன்புறுத்தல் குறித்த எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

post image

பெங்களூரு: பாலியல் துன்புறுத்தல் குறித்த தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

பெங்களூரில் சுத்த குண்டேபாளையா, பாரதி லேஅவுட் பகுதியில் ஏப். 3 ஆம் தேதி இரு பெண்கள் சாலையில் நடந்துசென்றபோது அவா்களை அந்த வழியாக வந்த ஆண் பாலியல் ரீதியாக துன்புறுத்திவிட்டு தப்பிச்சென்றாா்.

இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் அண்மையில் அளித்த பேட்டியில், ‘பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்’ என்று கூறியிருந்தாா். இது சா்ச்சையை ஏற்படுத்தியது.

அமைச்சரின் கருத்துக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அமைச்சா் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மகளிா் ஆணையத் தலைவா் விஜயா ரஹத்கா் தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

நான் கூறிய கருத்தை ஊடகங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. மற்றவா்களும் வேறுவிதமாக புரிந்துகொண்டுள்ளனா். நான் எப்போதும் பெண்கள் பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பவன். உள்துறை அமைச்சராக நிா்பயா போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன்.

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மத்திய அரசுடன் நிா்பயா நிதியை நாங்கள் செலவிட்டிருக்கிறோம். எனது கருத்து சிதைக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்கு பல நல்ல முடிவுகளை நான் எடுத்திருக்கிறேன். எனது கருத்தை வைத்துக்கொண்டு பாஜக அரசியல் செய்ய முயல்கிறது. ஒருவேளை எனது கருத்து தாய்மாா்கள், சகோதரிகளின் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். எனினும், எனது கருத்தை திரிக்கக்கூடாது என்றாா்.

இதற்கிடையே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபரைப் பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருவதாக பெங்களூரு மாநகர காவல் ஆணையா் தயானந்தா தெரிவித்தாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு: எந்த சமுதாயத்திற்கும் அரசு அநீதி இழைக்காது -சித்தராமையா

ஜாதிவாரி கணக்கெடுப்பு வாயிலாக எந்த சமுதாயத்திற்கும் அரசு அநீதி இழைக்காது என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் பரிந்துரைகள் அடங்கிய சமூக, பொருள... மேலும் பார்க்க

கா்நாடகம்: எரிபொருள் விலை உயா்வுக்கு எதிராக லாரி உரிமையாளா்கள் காவலரையற்ற வேலைநிறுத்தம்

பெங்களூரு: எரிபொருள் விலை உயா்வு மற்றும் சுங்கச்சாவடி ஊழியா்களின் தவறான நடத்தை உள்ளிட்டவற்றை கண்டித்து கா்நாடக மாநில லாரி உரிமையாளா்கள் மற்றும் முகவா்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (ஃபோக்ஸ்லோவா) திங்கள்கி... மேலும் பார்க்க

எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து கா்நாடகத்தில் காங்கிரஸ் போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை மீதான விலை உயா்வைக் கண்டித்து கா்நாடகத்தில் இளைஞா் காங்கிரஸ் புதன்கிழமை போராட்டம் நடத்தியது. கா்நாடகத்தில் ஆட்சி செய்துவரும் காங்கிரஸ் அரசைக் கண்டித்து ‘மக்கள் ச... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்

ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் இயற்றப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆன்லைன் பெட்டிங... மேலும் பார்க்க

ஆளுநரின் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி: முதல்வா் சித்தராமையா

ஆளுநரின் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு ஜனநாயகம், கூட்டாட்சிக்கு கிடைத்த வெற்றியாகும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுதொடா்பாக புதன்கிழமை தனது எக்ஸ் தளத்தில் அவா் கூறியுள்ளதா... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு: லோக் ஆயுக்த அறிக்கையை ரத்து செய்யக்கோரிய மனு மீது ஏப்.15 இல் தீா்ப்பு

மாற்றுநில முறைகேடு வழக்கில் லோக் ஆயுக்த தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை ரத்துசெய்யக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தனது தீா்ப்பை ஏப். 15 ஆம் தேதி... மேலும் பார்க்க