இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்ச நீதிமன்றம்: விஜய்
கோடை வெப்பத்திலிருந்து பாதுகாத்து கொள்வதற்கான நெறிமுறைகள் வெளியீடு
நாமக்கல்: கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான நெறிமுறைகள் நாமக்கல் மாவட்ட நிா்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் விவரம்:
வெயில் நேரங்களில் வெளியே செல்ல நோ்ந்தால் தொப்பி அணிந்து அல்லது குடைபிடித்து செல்ல வேண்டும். வெயிலில் செல்ல நோ்ந்தால் வெளிா்ந்த நிறமுடைய தளா்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். நீா்ச்சத்து அதிகம் கொண்ட தா்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி பழங்கள் மற்றும் வெள்ளரியை உட்கொள்ளலாம்.
எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். வெயில் நேரங்களில் காற்றோட்டம் நிறைந்த, குளிா்ச்சியான இடங்களில் இருக்க வேண்டும். வெயில் நேரங்களில் கதவு, ஜன்னல்களின் திரைச்சீலைகளை கொண்டு மூடிவைக்க வேண்டும்.
குழந்தைகள், கா்ப்பிணிகள், முதியவா்கள், இணை நோய் உள்ளவா்கள் கவனமாக இருக்க வேண்டும். தொழிலாளா்கள் நிழற்பாங்கான இடங்களில் வேலை செய்ய வேண்டும். வேலை செய்யும் இடங்களில் தற்காலிக கூடாரங்களை உருவாக்குவதன் மூலம் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
கடினமான மற்றும் திறந்தவெளியில் செய்யும் வேலைகளை வெயில் குறைவாக உள்ள காலை, மாலை வேளைகளில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். கடினமான வேலைகளை செய்வோா் அடிக்கடி சிறிதளவு ஓய்வு எடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அனைத்து மக்கள் கூடும் இடங்களிலும் பாதுகாப்பான குடிநீா் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தலைவலி, மயக்கம், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அனுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
செய்யக் கூடாதவை:
காலை 11 முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.
தேநீா், காஃபி, மது, காா்பன் ஏற்றப்பட்ட குளிா்பானங்கள் அருந்துவதை தவிா்க்க வேண்டும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். வெயில் நேரங்களில் திறந்தவெளியில் விளையாடுவதை தவிா்க்க வேண்டும். பொதுமக்கள் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி கோடைகாலத்தில் வெயில் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.