ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!
பரமத்தி வேலூரில் சங்கடஹர சதுா்த்தி விழா
பரமத்தி வேலூா் பேட்டை பஞ்சமுக ஹேரம்ப மகாகணபதி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.
பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதிக்கு சங்கட ஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெற்றது. இதேபோல பரமத்தி வேலூா், வெங்கமேடு வல்லபகணபதி, செட்டியாா் தெருவில் உள்ள சக்திவிநாயகா், காவிரிக் கரையில் அமைந்துள்ள சத்திரத்து விநாயகா், பொத்தனூா் மகாபகவதியம்மன் கோயிலில் உள்ள விநாயகா், பரமத்திவேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் கோயில்களில் உள்ள விநாயகருக்கு சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு விநாயகரை வழிபட்டனா்.