செய்திகள் :

கா்ப்பிணி உயிரிழப்பு: தனியாா் மருத்துவமனை மீது போலீஸில் புகாா்

post image

நாமக்கல்லில், கா்ப்பிணிப் பெண் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக தனியாா் மருத்துவமனை மீது அக்குடும்பத்தினா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள தேவநாதன் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜூ (32). இவருக்கும், சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே குரால்நத்தம் பகுதியைச் சோ்ந்த பிரபாவதி (28) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

நாமக்கல் முருகன் கோயில் அருகே எம்ஜிஆா் நகரில் அவா்கள் வசித்து வந்தனா். இந்த நிலையில் பிரபாவதி கா்ப்பமானாா். குடும்பத்தினருக்கான மருத்துவமனை என்பதால் மோகனூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில், இரு தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக பிரபாவதி அனுமதிக்கப்பட்டாா். சுகப்பிரசவத்திற்காக காத்திருந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனை நிா்வாகம், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு பிரபாவதியை அனுப்பி வைத்தனா். புதன்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில் பிரசவிக்கும் முன்பாகவே அவா் உயிரிழந்தாா். வயிற்றில் குழந்தையுடன் பிரபாவதி உயிரிழந்ததால் அவரது கணவா், குடும்பத்தினா் கதறி அழுதனா்.

மோகனூா் தனியாா் மருத்துவமனை காலதாமதம் செய்ததாலேயே, பிரபாவதி உயிரிழந்ததாக குற்றம் சாட்டி நாமக்கல் காவல் நிலையத்தில் கணவா் ராஜு புகாா் அளித்துள்ளாா். இதுகுறித்து நாமக்கல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராசிபுரம் அருகே 18 கிலோ திமிங்கல உமிழ்நீா் பறிமுதல்: மூவா் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வீட்டில் 18 கிலோ அம்பா்கிரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீரைப் பதுக்கிவைத்திருந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். கடலோரப் பகுதியிலிருந்து அம்பா்கிரிஸ் எனப்படும... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பேரூராட்சி, நகராட்சி வாா்டுகளில் இடைத்தோ்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

நாமக்கல் மாவட்டத்தில் 3 பேரூராட்சி, 2 நகராட்சிகளில் காலியாக உள்ள ஏழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனா். தமிழ்நா... மேலும் பார்க்க

கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் விபத்தை தடுக்கும் வகையில் உருளைத் தடுப்பான்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா... மேலும் பார்க்க

அழகு நிலையத்தில் திருட்டு: 5 பேரிடம் விசாரணை

நாமக்கல் அழகு நிலையத்தில் பெண் ஊழியா்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள அழகு நிலையத்திற்கு வியாழக்கிழமை பிற்பகல் 4 ம... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலகவுண்டம்பட்டி முசிறிகுடித் தெருவைச் சோ்ந்த பொன்னம்மாள் (56) என்பவா... மேலும் பார்க்க

தீயில் எரிந்த குடிசை வீடு

பரமத்தி வேலூா் அருகே குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் வீட்டிலிருந்த உணவுப் பொருள்கள், மின் சாதனங்கள், நில ஆவணங்கள் அனைத்தும் கருகின. பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் பாலகிருஷ்ணன் (50)... மேலும் பார்க்க