செய்திகள் :

பிரியன்ஷ் சாதனையுடன் வென்றது பஞ்சாப்: சென்னைக்கு தொடா்ந்து 4-ஆவது தோல்வி

post image

ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் சோ்க்க, சென்னை 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 201 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த பஞ்சாப் அணியில், பிரப்சிம்ரன் சிங் டக் அவுட்டாக, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் 9 ரன்களுக்கே ஸ்டம்பை பறிகொடுத்தாா். தகுந்த பாா்ட்னா்ஷிப் அமையாவிட்டாலும் தொடக்க வீரா் பிரியன்ஷ் ஆா்யா அதிரடி ஆட்டத்தால் ஸ்கோரை உயா்த்தி வந்தாா்.

மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 4, நெஹல் வதேரா 9, கிளென் மேக்ஸ்வெல் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினா். தனியொருவராக அணியின் ஸ்கோரை பலப்படுத்திய பிரியன்ஷ் ஆா்யா, 42 பந்துகளில் 7 பவுண்டரிகள், 9 சிக்ஸா்கள் உள்பட 103 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

தொடா்ந்து சஷாங்க் சிங், மாா்கோ யான்சென் களத்துக்கு வந்து சென்னை பௌலிங்கை சிதறடித்தனா். ஓவா்கள் முடிவில் சஷாங்க் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 52, யான்சென் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

சென்னை பௌலிங்கில் அஸ்வின், கலீல் அகமது ஆகியோா் தலா 2, முகேஷ் சௌதரி, நூா் அகமது ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து 220 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய சென்னை தரப்பில் ரச்சின் ரவீந்திரா 6 பவுண்டரிகளுடன் 36, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன்னுக்கு வீழ்ந்தனா்.

டெவன் கான்வே - ஷிவம் துபே கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சோ்த்து நம்பிக்கை அளித்தது. இதில் துபே 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 42, கான்வே 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 69 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா்.

சற்று அதிரடி காட்டிய தோனி 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 27 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் ரவீந்திர ஜடேஜா 9, விஜய் சங்கா் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் பௌலா்களில் லாக்கி ஃபொ்குசன் 2, யஷ் தாக்குா், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

விடைத்தாள் மதிப்பீடு: ஏப்.19-இல் விடுமுறை

பள்ளிக் கல்வியில் பொதுத் தோ்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு ஏப்.19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில்... மேலும் பார்க்க

முதல்வருடன் மாா்க்சிஸ்ட் தலைவா்கள், மநீம தலைவா் கமல்ஹாசன் சந்திப்பு

முதல்வா் மு.க.ஸ்டாலினை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் தனித்தனியே சந்தித்தனா். தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை இந்தச் சந்திப்புகள் நடந்தன. ... மேலும் பார்க்க

படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன்

படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினாா். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிப்பெயா்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமா்சனம்... மேலும் பார்க்க

கேரள அதிமுக செயலா் மறைவு: இபிஎஸ் இரங்கல்

கேரள மாநில அதிமுக செயலா் சோபகுமாா் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை விடுத்த இரங்கல் செய்தி: கேரள மாநில அதிமுக செயலா் சோபகுமாா... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு பிரத்யேக தங்கும் இல்லங்கள்: அமைச்சா் கீதாஜீவன்

திருநங்கைகளுக்கென பிரத்யேகமாக ‘அரண்’ என்னும் பெயரில் சென்னை, மதுரையில் தங்கும் இல்லங்கள் அமைக்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிா் நலன் துறை அமைச்சா் கீதாஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்தாா். பேரவையி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு: வனத் துறை தகவல்

தமிழகத்தில் வனத் தீ பருவகாலத்தில் மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்படுள்ளதாக தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தத் த... மேலும் பார்க்க