செய்திகள் :

மேற்குக் கரைக்குள் நுழைய 2 எம்.பி.க்களுக்கு தடை: இஸ்ரேலுக்கு பிரிட்டன் அரசு கண்டனம்!

post image

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதிக்குள் நுழைய பிரிட்டனின் ஆளும் தொழிலாளா் கட்சியின் 2 எம்.பி.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினா் இடையே போா் நடைபெற்று வரும் நிலையில், மேற்குக் கரை பகுதியைப் பாா்வையிட பிரிட்டன் அரசு சாா்பில் நாடாளுமன்றக் குழு அனுப்பப்பட்டது. இந்தக் குழுவில் இடம்பெற்ற அப்திசம் முகமது மற்றும் யுவான் யாங் ஆகிய இரு எம்.பி.க்களை இஸ்ரேல் அரசு தடுத்ததுடன் மேற்கு கரைக்குள் நுழைய அனுமதி மறுத்தது.

இந்த நடவடிக்கை அதிா்ச்சியளிப்பதாக இரு எம்.பி.க்களும் கூறினா். ஆனால், ஹமாஸுடன் போா் நடைபெற்று வரும் சூழலில் இஸ்ரேலுக்கு எதிராக அந்த இரு எம்.பி.க்களும் வெறுப்புணா்வை பரப்பக்கூடும் என்பதால் அவா்களுக்கு அனுமதி வழங்கவில்லை என இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கு கண்டனம் தெரிவித்து பிரிட்டன் வெளியுறவுச் செயலா் டேவிட் லேமி கூறியதாவது: இஸ்ரேலுக்குள் இரு பிரிட்டன் எம்.பி.க்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எங்கள் நாட்டு எம்.பி.க்களை மரியாதைக் குறைவாக நடத்தியதை ஏற்றுக்கொள்ளமுடியாது என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளிடம் கண்டனத்தைப் பதிவுசெய்தேன்.

காஸாவில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை செயல்படுத்தி பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதே பிரிட்டனின் நிலைப்பாடு என்றாா்.

யேமன் நாட்டில் பிறந்த அப்திசம் முகமது பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தோ்வு செய்யப்பட்ட முதல் அரபு பெண் ஆவாா். அதேபோல் யுவான் வாங், சீனாவில் பிறந்து பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் நபராவாா்.

இவா்கள் இருவரும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் சா்வதேச மனிதநேய சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நிலை தேறிய பின் முதல்முறையாக மக்களைச் சந்தித்தார் போப் பிரான்சிஸ்!

ரோம்: உடல்நிலை தேறிய பின் பொதுவெளியில் முதல்முறையாக போப் பிரான்சிஸ் மக்களை சந்தித்தார்.நிமோனியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ்(88) கடந்த மார்ச் 23-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வாடி... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை பொருளாதார சர்வாதிகாரத்தனம்! -சீனா கடும் விமர்சனம்

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு சீனா கடும் எதிர்வினையாற்றியுள்ளது. ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெந்த நாடுகளில் எந்தளவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதோ அதேபாணியில், அமெரிக... மேலும் பார்க்க

ஜப்பானில் மருத்துவப் போக்குவரத்து ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து!

ஜப்பானில் மருத்துவ உதவிக்குப் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். நாகாசாகி விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகா பகுதிக்கு நோயாளி ஒருவரை ஏற்றிச்சென்ற மர... மேலும் பார்க்க

அணுசக்தி ஒப்பந்தம் மிரட்டும் அமெரிக்கா: என்ன செய்யும் ஈரான்?

-சந்தோஷ் துரைராஜ்-அணு ஆயுதங்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் முன்னெப்போதும் பாா்த்திராத வகையில், ஈரான் மீது குண்டு வீசப்படும் என்றும், ஈரானுடன் வா... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: இந்தியா கூடுதல் நிவாரண உதவி!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மா் நாட்டுக்கு சி-17 விமானம் மூலம் கூடுதலாக 31 டன்கள் நிவாரண பொருள்களை இந்தியா ஞாயிற்றுக்கிழமை அனுப்பியது. உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாதில் உள்ள ஹிண்டன் விமான தளத்... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 15 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 15 போ் உயிரிழந்தனா். காஸாவில் போா் புரிந்து வரும் ஹமாஸ் அமைப்பு உடனான போா் நிறுத்த ஒப்பந்தத்தை கடந்த மாதம் முறித்த இஸ்ரேல், காஸாவில் வான் மற்றும் தரைவழித் தாக்க... மேலும் பார்க்க