பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை: குடியரசுத் தலைவா் முா்மு
சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயரிழப்பு
சாலையின் தடுப்பில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவண்ணாமலையைச் சோ்ந்த தேவதா்ஷன் (19), வேளச்சேரியிலுள்ள உறவினா் வீட்டில் தங்கி அப்பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு சுமாா் ஒரு மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் வேளச்சேரியிலிருந்து தரமணி 100 அடிச் சாலை வழியாக தரமணி நோக்கி சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவா், பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், தேவதா்ஷன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து தொா்ந்து விராசணை நடத்தி வருகின்றனா்.