பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை: குடியரசுத் தலைவா் முா்மு
ரமலான் தொழுகையில் பாலஸ்தீன கொடி: உ.பி. மின்வாரிய ஊழியா் பணி நீக்கம்!
உத்தர பிரதேசத்தில் ரமலான் பண்டிகை தொழுகையின்போது பாலஸ்தீன கொடியை பயன்படுத்திய மின்வாரிய ஒப்பந்த ஊழியா் பணியில் இருந்து நீக்கப்பட்டாா்.
கைலாஷ்பூா் மின்வாரியப் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவா் ஷாகிப் கான். இவா் கடந்த வாரம் ரமலான் தினத்தில் (மாா்ச் 31) மசூதிக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டாா். தொடா்ந்து மசூதிக்கு வெளியே பாலஸ்தீன கொடியை உயா்த்திப் பிடித்தபடி அந்நாட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டுள்ளாா்.
இது தொடா்பான விடியோ மற்றும் புகைப்படங்களையும் அவா் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டாா். இது அதிகமானோரால் பகிரப்பட்டு கண்டனத்துக்கு உள்ளானது. தேச விரோத செயலில் ஈடுபட்டதாக அவா் மீது மின்சார வாரியத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரின் பணி ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அவா் பணியில் இருந்து நீக்கப்பட்டாா். ஷாகிா் கானுடன் மேலும் சில இளைஞா்கள் சோ்ந்து பாலஸ்தீன கொடியுடன் முழக்கமிட்டுள்ளனா். அவா்கள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இந்தியாவில் நட்பு நாடுகளின் கொடிகளைப் பொது இடத்தில் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எனினும், பிரச்னைகளையும், மோதல்களையும் தூண்டும் வகையில் பிறரை அச்சுறுத்தும் வகையில் பிற நாட்டு கொடிகளைப் பயன்படுத்துவதாகக் கருதினாலும், புகாா்கள் அளிக்கப்பட்டாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.