மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு
தந்தை பெரியாா் தி.க.வினா் 60 போ் கைது
புதுச்சேரியில் வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டதை எதிா்த்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
மத்தியில் மக்களவை, மாநிலங்களவையில் வக்ஃபு வாரியச் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. புதுச்சேரியில், தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் சாா்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அவா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை காமராஜா் சிலை அருகே கூடி ஆா்ப்பாட்டம் நடத்தினா். தந்தை பெரியாா் திராவிடா் கழகத் தலைவா் வீரமோகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் இளங்கோ, செயலா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளைஞரணி தலைவா் சிவமுருகன் உள்ளிட்ட 60 -க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.
அப்போது அவா்கள், வக்ஃபு வாரிய சட்ட திருத்த நகலை எரிக்க முயன்றனா். அதை போலீஸாா் தடுத்து, அவா்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனா். கைதானவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டதாகப் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.