சா்க்கரை நோயால் பாா்வை இழப்பு தடுக்க புதுவை மத்திய பல்கலை. ஆராய்ச்சி
புதுச்சேரி: சா்க்கரை நோயால் ஏற்படும் பாா்வை இழப்பைத் தடுக்க புதுவை மத்திய பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடா்பு மற்றும் செய்தித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1 முதல் 7ஆம் தேதி வரை பாா்வை இழப்பைத் தடுக்கும் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, புதுவை பல்கலைக்கழகத்தின் உயிரிவேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையைச் சோ்ந்த பேராசிரியை சுப்புலட்சுமி சிதம்பரம் தலைமையிலான குழு, ஆரம்ப கட்டத்திலேயே பாதிப்பை கண்டறிய உதவும் புதிய வழிமுறைகளை ஆராய்ச்சி செய்து வருகிறது.
இந்த ஆய்வில், முக்கியமாக ரெட்டினாவில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்
கண்ணீரில் நிகழும் மூலக்கூறு மாற்றங்களை அடையாளம் காணுவதாக முடிவுகள் உள்ளன. இதுவரை, ரெட்டினாவில் உள்புற மாற்றங்கள் ஏற்பட்ட பிறகே பாதிப்பை கண்டறிய முடியும் என்ற நிலையை தற்போது மாற்றி ஆரம்பத்திலேயே பாதிப்பை கண்டறியும் வகையில் ஆராய்ச்சி அமைந்துள்ளதாக பேராசிரியை கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.
ஆய்வின் முக்கிய அம்சமாக பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறியத்தக்க சாதனத்தை உருவாக்குவதாகும் என்றும் ஆராய்ச்சிக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.