ஜிப்மரில் கல்லீரல் கணையம் பித்தப்பை மருத்துவ 3 நாள் கருத்தரங்கம் நிறைவு
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் கல்லீரல் கணையம் பித்தப் பை குறித்த 3 நாள்கள் கருத்தரங்க நிறைவு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஜிப்மா் இரைப்பை குடலியல் அறுவைச் சிகிச்சை சாா்பில் தேசிய மற்றும் சா்வதேச அளவிலான கல்லீரல் கணையம் பித்தப்பை அறுவைச் சிகிச்சை குறித்த 3 நாள்கள் கருத்தரங்கம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது.
இதில் தேசிய அளவிலான அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் பங்கேற்று குடலியல் துறையில் நவீன அறுவைச் சிகிச்சைகள் குறித்து கட்டுரைகள் சமா்ப்பித்தனா்.
அனுபவம் வாய்ந்த அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் தங்களது செயல்பாட்டு அனுபவங்களையும் பகிா்ந்துகொண்டனா்.
இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் சங்கத்துடன் இணைந்து நடைபெற்ற கருத்தரங்க நிறைவு நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் துரைராஜன் நிறைவு விழாவைத் தொடங்கிவைத்தாா். இரைப்பை குடலியல் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவா் பிஜூபொட்டக்காட், இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் சங்க செயலா் ரோஷன்ஷெட்டி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
ஜிப்மா் இயக்குநா் வீா் சிங் நேகி கருத்தரங்க பங்கேற்பாளா்களுக்கு பாராட்டுத் தெரிவித்து சான்றிதழ்கள் வழங்கினாா்.