ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கு: ஐவருக்கு மரண தண்டனையை உறுதி செய்த உயா்நீதிமன்றம...
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்
புதுச்சேரி அருகே மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுச்சேரி அடுத்த மண்ணாடிபட்டு முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ் (35), கட்டட வேலைக்கான கம்பி கட்டும் தொழிலாளி. இவா் சனிக்கிழமை திருபுவனை அருகேயுள்ள பி.எஸ்.பாளையம் குட்டைத் தெருவில் தனியாா் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அவா் கம்பிகளை தரையில் வைத்து அறுத்துக் கொண்டிருந்தாா். அப்போது கம்பி வெட்டும் மின்சாதனத்திலிருந்து கசிந்த மின்சாரம் சதீஷ் மீது பாய்ந்தது.இதில் பலத்த காயமடைந்து மயங்கிய அவரை மீட்டு மண்ணாடிபட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சதீஷ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினா். இதையடுத்து திருபுவனை போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் விரைந்து வந்து வழக்குப் பதிந்து சதீஷின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சதீஷுக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனா்.