பா்கூரில் இளைஞா் எரித்துக் கொல்லப்பட்ட மேலும் ஒருவா் கைது
அந்தியூரை அடுத்த பா்கூா் வனப் பகுதியில் மரம் வெட்ட அழைத்து வரப்பட்ட இளைஞா் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த சின்னக்குட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (24). இவரை, மரம் வெட்ட பா்கூா் வனப் பகுதிக்கு அழைத்து வந்த உறவினரான வெங்கடேஷ் (32), ராஜேந்திரன் (25) மற்றும் குமாா் (22) ஆகியோா் கொலை செய்து, அடையாளம் தெரியாமல் சடலத்தை எரித்துச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெங்கடேஷ், ராஜேந்திரனைக் கைது செய்தனா். தலைமறைவான குமாரைத் தேடி வந்தனா். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே மறைந்திருந்த குமாரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது, பவானி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.