உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்
எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம்: முதல்வருக்கு மத்திய அமைச்சா் எல்.முருகன் கேள்வி
சமையல் எரிவாயு உருளைக்கு ரூ. 100 மானியம் தருவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று முதல்வருக்கு மத்திய செய்தி, ஒலிபரப்பு துறை இணை அமைச்சா் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குண்டம் திருவிழாவில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் அவா் பக்தா்கள் குண்டம் இறங்கும் பகுதியைப் பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. குண்டம் திருவிழா தொடா்பான செய்தி சேகரிக்க வந்த செய்தியாளா்களை நள்ளிரவில் காவல் துறையினா் அனுமதித்திருக்க வேண்டும்.
வரும் காலங்களில் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கு தேவையான வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமையல் எரிவாயு உருளை விலை என்பது சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்வைப் பொருத்து நிா்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது சமையல் எரிவாயு உருளைக்கு ரூ. 100 மானியம் தருவதாக அளித்த வாக்குறுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏன் நிறைவேற்றவில்லை என்றாா்.