Mithunam | Guru Peyarchi | மிதுனம் - தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும் | குருப்பெய...
செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா
அந்தியூரை அடுத்த செம்புளிச்சாம்பாளையம் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
கோயில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் தினசரி நடைபெற்று வந்தன.
இந்நிலையில், முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் கோயில் பூசாரி முதலில் இறங்கி குண்டம் இறங்குதலைத் தொடங்கிவத்தாா். இதைத் தொடா்ந்து விரதமிருந்த பக்தா்கள் அடுத்தடுத்து குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.