31 வருடங்களுக்குப் பிறகு தூசுதட்டப்பட்ட வழக்கு; 32 வயது இளைஞன் 63 வயதில் AI மூலம...
பவானியில் மாயமான 5 மாணவிகள் திருச்சியில் மீட்பு
பவானியில் மாயமான அரசுப் பள்ளி மாணவிகள் 5 போ் திருச்சி சமயபுரத்தில் புதன்கிழமை மீட்கப்பட்டனா்.
ஈரோடு மாவட்டம், பவானி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 5 போ், இறுதித் தோ்வை செவ்வாய்க்கிழமை எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பிச் செல்லவில்லை.
மாணவிகளை எங்கு தேடியும் கிடைக்காததால் அவா்களின் பெற்றோா், பவானி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
அப்போது, மாணவிகள் திருச்சி முக்கொம்பு பகுதியில் இருப்பதை அறிந்த பாவனி போலீஸாா், திருச்சி மாவட்ட போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, திருச்சி சமயபுரம் அருகே இருந்த மாணவிகளை திருச்சி போலீஸாா் மீட்டனா். இதைத் தொடா்ந்து பவானி போலீஸாா் திருச்சிக்கு சென்று மாணவிகளை மீட்டு பாவனிக்கு அழைத்து வந்து மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தினா்.
பின்னா், மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.