ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி
தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வில் கோடேபாளையம் அரசுப் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தமிழகம் முழுவதும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில், வெற்றிபெறும் மாணவா்களுக்கு பிளஸ் 2 வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு ஆண்டு நடைபெற்ற தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வு முடிவு அண்மையில் வெளியிடப்பட்டன.
இதில், பவானிசாகா் அருகேயுள்ள கோடேபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதே பள்ளியைச் சோ்ந்த மாணவி வே.இனியா 147 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளாா்.
தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களை பள்ளி தலைமையாசிரியை சித்ரா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.