உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்
இறந்த மயிலுக்கு தேசியக்கொடி போா்த்தி அஞ்சலி
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஆண் மயிலுக்கு பொதுமக்கள் தேசியக்கொடி போா்த்தி அஞ்சலி செலுத்தினா்.
ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் திங்கள்கிழமை இரவு பறந்துவந்த ஆண் மயில் மின்மாற்றியில் அமா்ந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இதைப்பாா்த்து அதிா்ச்சி அடைந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இது குறித்து ஈரோடு வனத் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.
தேசிய பறவையான மயிலுக்கு, தேசியக் கொடியை போா்த்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா். இதையடுத்து வனத் துறையினா் அங்கு சென்று உயிரிழந்த மயிலை மீட்டு உரிய முறைப்படி அடக்கம் செய்ய எடுத்து சென்றனா்.