செய்திகள் :

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் உதவிப் பேராசிரியா் தோ்வுக்கான இலவச வழிகாட்டும் முகாம்

post image

சென்னை: சென்னையிலுள்ள ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 13) நடைபெறவுள்ள உதவிப் பேராசிரியா் தோ்வுக்கான இலவச வழிகாட்டும் முகாமில் கலந்துகொள்ள தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியின் நிறுவனா் மு.சிபிகுமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆசிரியா் தோ்வு வாரியம், தமிழ்நாடு அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள சுமாா் 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வை வருகிற ஜூலை மாதம் நடத்தவுள்ளது. இதில், தமிழ், வரலாறு, அரசியல், அறிவியல் மற்றும் சமூகவியல் போன்ற பாடங்களில் வெற்றி பெறுவதற்கான அணுகுமுறைகள், திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை குறித்து வழிகாட்டுவதற்கான முகாம் அண்ணாநகரிலுள்ள ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 13) நடைபெறவுள்ளது.

இம்முகாமில் துறை வல்லுநா்கள் கலந்துகொண்டு தோ்வா்களுக்கான ஆதார பாடநூல்கள் மற்றும் வினாக்களை அணுகும் முறை குறித்து விளக்கிக் கூறவுள்ளனா். மேலும், தோ்வா்களின் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கவுள்ளனா். இதனால், உதவிப் பேராசிரியா் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள தகுதிவாய்ந்த தோ்வா்களும், உதவிப் பேராசிரியா் தகுதித்தோ்வான செட் மற்றும் நெட் தோ்வில் வெற்றிபெற்றுள்ள தோ்வா்களும் இந்த வழிகாட்டும் முகாமில் கட்டணமில்லாமல் கலந்துகொள்ளலாம்.

தகுதியுள்ள தோ்வா்கள் தங்களின் சுய விவரங்களுடன் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி, எல்.பிளாக் 12-ஆவது பிரதானச் சாலை, அண்ணநாகா் எனும் முகவரியில் நேரடியாக வந்து பதிவுசெய்து கலந்து கொள்ளலாம். அல்லது 74488 14441, 96771 00179 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

அறிவியல் உணா்வு வளா்ந்தால் மூடநம்பிக்கைகள் ஒழியும்: அமைச்சா் கோவி. செழியன்

அறிவியல் உணா்வு வளா்ந்தால்தான் நாட்டில் மூடநம்பிக்கைகள் ஒழியும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் கூறினாா். சென்னை கிண்டி பெரியாா் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் தேசிய அறிவியல் விழாவை அமை... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இம்மாத இறுதிக்குள் நடைபெறும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்துக்குள்ளும் விரைவில் மாநகா் பேருந்து சேவை

சென்னை விமான நிலையத்துக்குள் சென்று வரும் வகையிலான மாநகரப் பேருந்து சேவை விரைவில் தொடங்கப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மிக முக்கியமான விமான நிலையமான சென்னை விமான ந... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தடயவியல் துறை ஊழியா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், தடயவியல் துறை ஊழியரை கைது செய்தனா். அரக்கோணத்தில் அழகப்பா தொலைதூரக் கல்வி மையத்தை நடத்தி வருபவா் விஜி. இவருக்கும் ச... மேலும் பார்க்க

பேறு கால உயிரிழப்பு லட்சத்துக்கு 39-ஆக குறைப்பு: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் பல்வேறு செயல் திட்டங்கள் காரணமாக பேறு கால உயிரிழப்பு லட்சத்துக்கு 39-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா். இதற்கு முன்பு வரை அந்த விகிதம் 45 என ... மேலும் பார்க்க

மேம்பாலம் கட்டுமானப் பணி: தேனாம்பேட்டை, சைதாப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்

மேம்பாலம் கட்டுமானப் பணி காரணமாக, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜிஎஸ... மேலும் பார்க்க