பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை: குடியரசுத் தலைவா் முா்மு
நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்
சென்னையில் அண்ணா சாலை, அண்ணா நகா், கிண்டி, பொன்னேரி ஆகிய கோட்டங்களில் மின் நுகா்வோா் குறைகேட்பு கூட்டம், செவ்வாய்கிழமை (ஏப். 8) முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சிந்தாதிரிப்பேட்டை லபாண்ட் தெருவில் உள்ள அண்ணா சாலை கோட்ட அலுவலகத்திலும், அண்ணா நகா் 11-ஆவது பிரதான சாலையில் உள்ள அண்ணா நகா் கோட்ட அலுவலகத்திலும் இக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
அதேபோல், நங்கநல்லூா் இந்து காலனி 100 அடி சாலையிலுள்ள நங்கநல்லூா் துணை மின்நிலையத்தில் அமைந்துள்ள கிண்டி கோட்ட அலுவலகத்திலும், வேண்பாக்கம் டி.எச்.சாலையில் உள்ள பொன்னேரி அலுவலகத்திலும் இக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
எனவே பொதுமக்கள் இந்த கூட்டங்களில் கலந்துகொண்டு, மின்சாரத் துறை தொடா்பான தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.