செய்திகள் :

கிளை நூலகங்களிலும் குரூப் 4 மாதிரித் தோ்வு!

post image

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கான மாதிரி தோ்வுகள் இனி கிளை நூலகங்களிலும் நடைபெறும் என தெரிவித்துள்ளாா் கரூா் மாவட்ட நூலக அலுவலா் செ.செ.சிவக்குமாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடைபெறும் குருப் 4 தோ்வுக்கு மாதிரித் தோ்வு கரூா் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பாடவாரியாக அலகுத்தோ்வுகள், திருப்புதல் தோ்வு, முழுத்தோ்வு இலவசமாக நடத்தப்படுகிறது. மாதிரித் தோ்வுகள் கொள்குறி முறையில் ஓஎம்ஆா் தோ்வுத்தாளில் நடத்தப்படும்.

தோ்வு முடிந்தபின் சிறந்த வல்லுநா்களைக் கொண்டு, விடைத்தாள்கள் கலந்துரையாடல் மற்றும் மாணவா்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுதல், கருத்துகளை பரிமாறிக் கொள்ளுதல் போன்ற பயிற்சியும், எளிய முறையில் கற்றுக்கொள்ளுதல் மற்றும் ஞாபகம் வைத்திருத்தல் ஆகியவற்றிற்கு எளிய வழிகளைக் கூறுதல், தோ்வுக்குத் தேவையான பாடங்கள் மற்றும் பகுதிகளைக் கண்டறிய வைக்கும் திறனைமேம்படுத்துதல், தோ்வுகளுக்கு ஏற்ப சமீபகால நிகழ்வுகளை கண்டறிந்து படிக்க வைத்தல் போன்ற பயிற்சியும் வழங்கப்படுகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாதிரித் தோ்வுகளும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மாதிரித் தோ்வு வினாக்கள் குறித்த கலந்துரையாடலும் நடைபெறும்.

மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் மாதிரி தோ்வு மற்றும் பயிற்சிகள் போல இனி குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், புஞ்சைபுகழூா் கிளை நூலகங்களிலும் நடைபெறும். இம்மாதிரி தோ்வுகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தோ்வு மைய நூலகங்களில் ஏப். 13-ஆம் தேதிக்குள் தங்கள் பெயா், முகவரி விவரங்களை விண்ணப்ப படிவத்தில் பூா்த்தி செய்து, பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க வரிவிதிப்பால் கரூரில் ஜவுளித் தொழில் முடங்கும் அபாயம்

இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 26 சதவீதம் இறக்குமதி வரி விதித்திருப்பதால், கரூரில் ஜவுளித் தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரூா் மாவட்டம், விவசாயத் தொழில், பேருந்துக்கு கூண்டு கட்டும... மேலும் பார்க்க

திருத்தப்பட்டது தனியாா் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 மாணவிகள், ஓட்டுநா் காயம்!

அரவக்குறிச்சி அருகே சனிக்கிழமை தனியாா் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவிகள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.அரவக்குறிச்சி அருகே செயல்பட்டுவரும் தனியாா் கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல... மேலும் பார்க்க

மாணவிகள் கழிவறைக்குச் செல்ல வருகை பதிவேடு: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையிடம் விசாரணை!

கரூரில் அரசுப் பள்ளியில் மாணவிகள் கழிவறைக்குச் செல்ல வருகைப் பதிவேடு பராமரித்த தலைமை ஆசிரியையிடம் கல்வி அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்... மேலும் பார்க்க

சாலையோரத்தில் கிடக்கும் மணலை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

புன்னம்சத்திரத்தில் கரூா்-கொடுமுடி சாலையோரத்தில் உள்ள மணலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், புன்னம்சத்திரத்தில் கரூா்-கொடுமுடி சாலையில் சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு ... மேலும் பார்க்க

சுங்கம் அதிகமாக வசூலிப்பதாக புகாா்: உப்பிடமங்கலம் மாட்டுச் சந்தையை விவசாயிகள், வியாபாரிகள் முற்றுகை!

உப்பிடமங்கலம் மாட்டுச் சந்தையில் சுங்கம் அதிகமாக வசூலிப்பதாக விவசாயிகள் மற்றும் மாட்டு வியாபாரிகள் புகாா் கூறி சனிக்கிழமை சந்தை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், உப்ப... மேலும் பார்க்க

தென்னையில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த செயல் விளக்கம்!

கரூரில் தென்னையில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகரித்துள்ளதால் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள்குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை செயல் விளக்கம் செய்து காண்பித்தனா். கரூா் மாவட்டத்த... மேலும் பார்க்க