பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சாலையோரத்தில் கிடக்கும் மணலை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!
புன்னம்சத்திரத்தில் கரூா்-கொடுமுடி சாலையோரத்தில் உள்ள மணலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம், புன்னம்சத்திரத்தில் கரூா்-கொடுமுடி சாலையில் சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் மணல் குவியல் நிறைந்து காணப்படுகிறது.
இந்த சாலை வழியாகத்தான் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட புன்னம்சத்திரம், பிரேம்நகா், பெருமாள்நகா், பெரியரங்கபாளையம், சின்னரங்கபாளையம், சத்திரம்ஆதிதிராவிடா்காலனி, பஞ்சயங்குட்டை, தலையீத்துபட்டி, புள்ளையாம்பாளையம், பெரியநடுப்பாளையம், சின்னநடுப்பாளையம், மேலப்பாளையம், புன்னம், கைலாசபுரம், சடையம்பாளையம், பசுபதிபாளையம், வசந்தம் காலனி, ஆலாம்பாளையம், சேங்கட்டனூா், பழமாபுரம் ஆலாம்பாளையம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மக்கள் நாள்தோறும் கரூருக்கு வருகின்றனா்.
இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது மணல் சறுக்கி கீழே விழும் நிலை உள்ளது. இதுவரை 50-க்கும் மேற்பட்டோா் கீழே விழுந்து காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் காற்று அதிகளவு வீசும்போது மணல் துகள்கள் பரவுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். எனவே சாலையோரம் குவிந்து கிடக்கும் மணலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.