முதல் பந்தில் விக்கெட் எடுக்க முடிகிறது; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச...
திருத்தப்பட்டது தனியாா் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 மாணவிகள், ஓட்டுநா் காயம்!
அரவக்குறிச்சி அருகே சனிக்கிழமை தனியாா் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவிகள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.
அரவக்குறிச்சி அருகே செயல்பட்டுவரும் தனியாா் கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி மாணவ, மாணவிகளை அழைத்து வருவதற்காக சனிக்கிழமை காலை கல்லூரி பேருந்து புறப்பட்டது.
இந்த பேருந்தை திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே உள்ள கூவக்காபட்டி, வெள்ளைய கவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த வீரன் மகன் முருகேஷ் (55) என்பவா் ஓட்டிச் சென்றாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே உள்ள தமுத்துப்பட்டியில் இருந்து 38 மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து வந்து கொண்டிருந்தது. அரவக்குறிச்சி அருகே உள்ள சின்னதொப்பாரப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது சாலையின்ஓரத்தில் பேருந்து கவிழ்ந்தது.
இதில், ஓட்டுநா் முருகேஷ், மாணவிகள் தா்ஷினி (19), தனியா (18), கனகதுா்கா (18), மதுமிதா (18), சண்முகப்பிரியா (19), குங்கும ப்ரீத்தி (17) ஆகிய 7 பேரு காயமடைந்தனா். இதில், பலத்த காயமடைந்த மாணவி தனியா கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். மற்றவா்கள் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.