டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 50 காசுகள் சரிந்து ரூ.86.26-ஆக முடிவு!
அரசுப் பள்ளிக் கட்டடத்தில் இளம்பெண்ணுடன் இரவில் தங்கிய போதை இளைஞர்! - திருச்சி அதிர்ச்சி
திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து வாளாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் பள்ளி வளாகத்தின் பின்புறம் உள்ள கட்டடத்தில் மதுபோதையில் ஒரு பெண்ணுடன் இளைஞர் இருந்துள்ளார். இதை அறிந்த அப்பள்ளி ஆசிரியர்கள் வீடியோ எடுக்க சென்றபோது, 'மது போதையில் நள்ளிரவு இங்கு வந்து படுத்திருந்தோம். இப்போது செல்கிறோம். நாங்கள் இங்கு வந்தது என்ன தவறு?' என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

மேலும், `பள்ளியில் நள்ளிரவில் படுத்துவிட்டு செல்வதற்கு இது விடுதியா? ' என்று ஆசிரியர்கள் கேட்டதற்கு, 'உங்களுக்கு என்ன பிரச்னை?' என மிரட்டி உள்ளார். மேலும் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. `நள்ளிரவில் பள்ளிக்குள் வந்து இருவரும் ஒன்றாக உறங்கினோம். தற்போது நாங்கள் கிளம்புகிறோம்' என மிரட்டிய சம்பவம் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.