உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் - தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரி...
ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!
ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு (ஏப்.7) வான்கடே திடலில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஆர்சிபி மோதியது.
இந்தப் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்று அசத்தியது ஆர்சிபி.
10 ஆண்டுகளுக்குப் பிறகு வான்கடேவில் மும்பை இந்தியன்ஸை ஆர்சிபி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் 64 ரன்கள் குவித்த ரஜத் படிதார் ஆட்டநாயகனாக தேர்வானார்.
இந்தப் போட்டியில் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் மெதுவாக பந்துவீசியதால் அதன் கேப்டன் ரஜத் படிதாருக்கு பிசிசிஐ-இன் விதிமுறையின்படி ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
பழைய விதியில் கேப்டனுக்கு 1 முறை எச்சரிக்கை விடப்பட்டு 2ஆவது முறை போட்டியில் இருந்து விடுவிக்கப்படுவார். புதிய விதிமுறையின்படி அபராதம் விதிக்கப்படுகிறது.
ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கேவை சேப்பாக்கில் வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி 6 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறது.