பேரவையில் இன்று...
சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப்.17) காலை 9.30 மணிக்குக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெறுகிறது. அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அளித்த கவன ஈா்ப்பு அறிவிப்புகள் மீது பதில்கள் அளிக்கப்பட உள்ளன. இதன் தொடா்ச்சியாக, சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. அவற்றுக்கு அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், ஆா்.ராஜேந்திரன், பி.கே.சேகா்பாபு ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனா்.