செய்திகள் :

மதுரை: `பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம்'- `பகீர்' கிளப்பும் ரூ.24 கோடி மோசடி!

post image

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம் எனக் கூறி 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீஸ்காரர் குடும்பத்தினர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ள சம்பவம், மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

fraud

மதுரை மாவட்டம், கடச்சனேந்தலில் வசிக்கும் புதூரில் போலீஸாகப் பணிபுரிந்து வருபவர் ரமேஷ் தங்கராஜ். இவர் மனைவி பிரேமலதாவுடன் 'குயின் டிரேடிங்' என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி, அதை சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து சமீபத்தில் மதுரையிலுள்ள ஹோட்டலில் கூட்டம் நடத்தியுள்ளனர். அதில் கலந்துகொண்டவர்களிடம், `எங்கள் நிறுவனம் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம்' என ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர்.

இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்தவர்களும் மதுரை , கோயம்புத்தூர், சேலம், திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துககும் மேற்பட்டவர்களை 5 லட்சம் முதலாக 20 லட்சம் வரை முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

இந்த நிலையில் முதலீடு செய்தவர்களுக்கு முதல் 3 மாதங்களுக்கு லாபத் தொகையினை வழங்கியுள்ளனர். ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் முதல் லாபத் தொகை வழங்கவில்லை. அதனால் முதலீட்டை திருப்பி கேட்டவர்களிடம் பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக இருவரும் கூறியுள்ளனர்.

மோசடி

ஆனால், பிப்ரவரி 24ஆம் தேதி முதல் இருவரையும் சந்திக்க முடியவில்லை என்று கூறும் பாதிக்கப்பட்டவர்கள், "அவர்கள் மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், எஸ்.பி ஆகியோரிடம் புகார் அளித்ததுடன் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்தோம். ஆனால், இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொருவரும் 20 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து ஏமாற்றமடைந்து நிற்கிறோம். எனவே கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் கலெக்டரிடம் முறையிட்டுள்ளோம். மோசடி செய்த ரமேஷ் தங்கராஜ் புதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்ததால் அவரை நம்பி பணம் செலுத்தினோம். ஆனால் அவரும் அவரது மனைவியும் சேர்ந்து எங்களை ஏமாற்றி விட்டார்கள். எனவே எங்களுடைய பணம் கிடைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர்

'அந்த பொண்ணுக்கு 3 முறை நிச்சயம் ஆகிருக்கு; எல்லாமே மோசடி' - இருட்டுக்கடை உரிமையாளர் சம்பந்தி

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகளுக்கு வரதட்சணை கொடுமை நடந்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகள் கனிஷ்கா தன் மாமனார் யுவராஜ் சிங் மற்றும் ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: 'குடும்ப தகராறில் கணவன் அடித்துக் கொலை'- தற்கொலை நாடகமாடிய தாய்-மகள் கைது!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே குடும்பத் தகராறில் கணவனை அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய சம்பவத்தில் தாய்-மகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போல... மேலும் பார்க்க

ரயில் தண்டவாளத்தில் தண்டால்; சோஷியல் மீடியாவில் பகிரப்பட்ட வீடியோ- இளைஞரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே தாமரை குட்டி விளைபகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். 90 கிலோ உடல் எடை கொண்ட கண்ணன், தனது எடையை விட 4 மடங்கு எடை கொண்ட 370 கிலோ காரை, யோக் வாக் என்ற முறைப்படி 25 மீட்ட... மேலும் பார்க்க

`பணம் திருடியதாக சந்தேகம்’ வேதனையில் 4வது மாடியில் இருந்து விபரீத முடிவெடுத்த கோவை மாணவி

கோவை நவ இந்தியா பகுதியில் இந்துஸ்தான் மருத்துவமனை இயங்கி வருகிறது. அவர்களுக்கு சொந்தமாக பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியும் உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அங்கு திருவண்... மேலும் பார்க்க

`இருட்டுக்கடையைக் கேட்டு கொடுமை செய்கிறார்கள்' - கணவர் வீட்டார் மீது புதுமணப்பெண் வரதட்சணை புகார்!

``இருட்டுக்கடை அல்வா கடையை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துவேன்" என தன் கணவர் மிரட்டியதாக புதுமணப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ... மேலும் பார்க்க

போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில் நடந்தது என்ன?

குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக இருக்கிறது. குஜராத் கடல் பகுதி மட்டுமல்லாது குஜராத் துறைமுகத்திற்கும் வெளிநாட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை... மேலும் பார்க்க