தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா: திருக்கொம்பு நடுதலுடன் தொடக்கம்.. |...
ஏப்.7ஆம் தேதியும் க்ருணால் பாண்டியாவும்..! மல்டிவெர்ஸ் சாதனைகள்!
ஒவ்வொரு ஆண்டும் ஏப்.7ஆம் தேதியில் க்ருணால் பாண்டியா செய்த சாதனைகளை ஆர்சிபி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
மும்பை அணியில் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக கலக்கியவர் க்ருணால் பாண்டியா. மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியாவின் சகோதரரான இவர் தற்போது ஆர்சிபி அணியில் விளையாடி வருகிறார்.
வானக்டேவில் நடைபெற்ற நேற்றைய (ஏப்.7) போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
சுழல் பந்துவீச்சாளரான இவர் 120 கி.மீ./மணி வேகத்தில் பவுன்சர் பந்துகளாக வீசி எதிரணியினரை திணறடித்து வருகிறார்.
இந்நிலையில், ஆர்சிபி அணி தனது எக்ஸ் தளத்தில் டாக்டர் ஸ்டிரேஞ்ச் (பிரபல ஹாலிவுட் கதாபாத்திரம்) பாணியிலான எடிட்டை செய்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்.7ஆம் தேதி சிறப்பாக பந்துவீசிய க்ருணால் பாண்டியாவின் சாதனைகளை பதிவிட்டுள்ளது.
அந்தப் பட்டியலுடன் டாக்டர் க்ருணால் பாண்டியாவின் மல்டிவெர்ஸ் எனக் குறிப்பிட்டுள்ளது.
2023, ஏப்.7: 3/18 (சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக)
2024, ஏப்.7: 3/11 (குஜராத் அணிக்கு எதிராக)
2025, ஏப்.7: 4/45 (மும்பை அணிக்கு எதிராக)
7th April in ' . ✨
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 8, 2025
▪ 3/18 vs SRH, 2023
▪ 3/11 vs GT, 2024
▪ 4/45 vs MI, 2025@krunalpandya24 | #PlayBold#ನಮ್ಮRCB#IPL2025#MIvRCBpic.twitter.com/8ZFuX89otl