படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.ம...
இளம் நடிகைக்குத் தாலி கட்டிய எஸ்.வி. சேகர்! ரசிகர்கள் விமர்சனம்!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் எஸ்.வி. சேகர் மீண்டும் சின்ன திரையில் நடிக்கவுள்ளார்.
மீனாட்சி சுந்தரம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தத் தொடரின் முன்னோட்டக் காட்சிகள், சர்ச்சைக்கு சற்றும் குறைவில்லாமல் வெளியாகியுள்ளது.
அதாவது, 76 வயதான எஸ்.வி. சேகர், 26 வயது நடிகைக்குத் தாலி கட்டுவதைப் போன்று முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.
மகன், மருமகள், பேரன் என யாருக்கும் தெரியாமல், ஏற்கெனவே திருமணமாகி, திருமண வயதில் மகள் இருக்கும் பெண்ணுக்கு எஸ்.வி. சேகர் தாலி கட்டுகிறார். கோயிலுக்கு வந்த அவரின் குடும்பத்தினர் இதனைக் கண்டு அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். மீனாட்சி சுந்தரம் தொடரின் இந்த முன்னோட்டக் காட்சி பலரால் பகிரப்பட்டு வருகிறது.
கலைஞர் தொலைக்காட்சியில் இத்தொடர் ஒளிபரப்பாகவுள்ளதால், கதைக்களம் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
எஸ்.வி. சேகர் இருக்கும் இடமெல்லாம் சர்ச்சையாவதாக முன்னோட்ட விடியோவில் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மீண்டும் சின்ன திரையில்...
நாடகக்கலைஞரான எஸ்.வி.சேகர், நினைத்தாலே இனிக்கும் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, வறுமையின் நிறம் சிவப்பு, குடும்பம் ஒரு கதம்பம், மணல் கயிறு, கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.
2006 முதல் அரசியலில் நேரடியாக ஈடுபட்டுவந்த எஸ்.வி. சேகர், நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சின்ன திரையில் நடிக்கவுள்ளார்.
மீனாட்சி சுந்தரம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தத் தொடரின் முன்னோட்ட விடியோவின்படி இவருக்கு நடிகை ஷோபனா ஜோடியாக நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முத்தழகு தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் ஷோபனா. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பூங்காற்று திரும்புமா என்ற புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதனிடையே மீனாட்சு சுந்தரம் தொடரிலும் நாயகியாய நடிக்கவுள்ளார். இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க |152 நாள்களில் முடிவடைந்த ரஞ்சனி தொடர்! காரணம்?