CSK : `கான்வேயை வெளியே அனுப்பியது ஏன்?' - தோல்விக்குக் காரணம் சொல்லும் ருத்துராஜ...
முதல்வா் பிறந்தநாள் விளையாட்டுப் போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கல்
முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி,சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை பரிசுகளை வழங்கி சிறப்பித்தாா்.
முதல்வா் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட அவைத் தலைவா் சுபாஷ், பொருளாளா் காா்த்திகேயன் தலைமை வகித்தனா். தொகுதி பாா்வையாளா்கள் சுகவனம், பாா் இளங்கோவன் முன்னிலை வகித்தனா்.
விழாவில், கோலப்போட்டி, கிரிக்கெட்டி, கைப்பந்து, கயிறு இழுத்தல், சமையல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்கள், இளைஞா்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் பரிசுகளை வழங்கி கௌரவித்தாா்.
இதில், மாநகரச் செயலாளா் ரகுபதி, பகுதி செயலாளா்கள் பிரகாஷ், மோகன், மாமன்ற உறுப்பினா்கள் சாந்தமூா்த்தி, தெய்வலிங்கம், ஈசன் இளங்கோ உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.