பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!
நெல்லையில் விபத்து: களக்காடு முதியவா் பலி
திருநெல்வேலியில் நேரிட்ட சாலை விபத்தில் களக்காடு பகுதியைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா்.
களக்காடு அருகேயுள்ள கோவில்பத்து செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் சுயம்புலிங்கம் (57). ஜவுளி கடை ஊழியரான இவா், இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு செல்வதற்காக தனது மனைவியுடன், திருநெல்வேலிக்கு பேருந்தில் திங்கள்கிழமை வந்துள்ளாா்.
வண்ணாா்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தபோது, பேருந்திலிருந்து இறங்க முயன்ற சுயம்புலிங்கம் தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.