செய்திகள் :

இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு இரையாகும் காஸா! அதிகரிக்கும் உயிர்ப் பலிகள்!

post image

காஸாவின் பல்வேறு இடங்களின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 19 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர்.

வடகிழக்கு காஸாவின் அல்-துஃபா பகுதியிலுள்ள ஹஸ்ஸொவ்னா குடும்பத்தின் வீட்டின் மீது நேற்று (ஏப்.16) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் பொது பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் மஹ்மொத் பசல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வடக்கு காஸாவின் ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் 3 பாலஸ்தீனர்களைக் கொன்றுள்ளதாகவும், அவர்களது தாக்குதலில் அப்பகுதியில் வாழும் ஏராளமான மக்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தெற்கு காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேலின் டிரோன் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். மத்திய நகரமான நுசைராத்தில் உணவு விநியோகிக்கும் கூடாரத்தைக் குறிவைத்து இஸ்ரேல் விமானம் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று (ஏப்.16) காலை முதல் கிழக்கு காஸாவின் பெயிட் ஹனோன் மற்றும் வடக்கு காஸாவின் பெயிட் லஹியா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தி வருவதாக பாலஸ்தீனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஹமாஸ் கிளர்ச்சிப்படையின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவினர் கிழக்கு காஸாவின் அல்-வாஃபா மருத்துவமனையின் அருகில் இஸ்ரேல் ராணுவத்தின் 4 பீரங்கிகளைத் தாக்கியுள்ளதாக அறிவித்துள்ளன.

இருப்பினும், இந்தத் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ராணுவத்தின் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், நேற்று (ஏப்.17) அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் போர் ஒப்பந்தம் முறிக்கப்பட்டு கடந்த மார்ச்.18 முதல் காஸா மீதான தங்களது தாக்குதலில் ஹமாஸ் கிளர்ச்சிப்படையின் 11 மூத்த அதிகாரிகளைக் கொன்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிக்க:துருக்கியிலிருந்து தாயகம் திரும்பிய 1,75,000 சிரியா மக்கள்!

உச்சநீதிமன்றம் மத மோதலை ஊக்குவிக்கிறது: பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை!

உச்சநீதிமன்றம் வரம்பு மீறி செயல்படுகிறது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.ஆளுநா் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்... மேலும் பார்க்க

இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம்: இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சேலம் பெருங்கோட்ட நிர்வாகிகள் சந்தி... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறார்கள்: அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை: உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் செய்திளார்களுடனான சந்... மேலும் பார்க்க

குலத்தொழில் திட்டத்தை தமிழ்நாடு அனுமதிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 1950-களில் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து களம் கண்ட தமிழ்நாடு, குலத்தொழில் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் குன... மேலும் பார்க்க

வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு!

மதிமுகவின் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி எம்... மேலும் பார்க்க

மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ சனிக்கிழமை அறிவித்துள்ளார். மேலும் பார்க்க