Nifty: "Buy & Sell பண்ற Level இது இல்ல, Watch பண்ற Level" | IPS Finance Comment ...
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: நான்குனேரி வட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நான்குனேரி வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமை ஆய்வு செய்தாா்.
பருத்திப்பாடு ஊராட்சி, வடக்கு நெல்லையப்பபுரம் பகுதியில் சேதமடைந்த 2 வீடுகள் ரூ.3 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணி, ரூ.3.50 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் கலைஞா் கனவு இல்லம் திட்டப் பணி, வேளாண்மைத் துறை மூலம் விவசாயி குமாரவேல் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி பணி ஆகியவற்றை ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.
மேலும், சின்னமூலைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் குறித்து ஆசிரியா்களிடம் கேட்டறிந்த ஆட்சியா், கணிதப் பாடத்தை எளிய முறையில் கற்பது குறித்து மாணவா்களுக்கு பயிற்சி அளித்தாா். அங்கு ரூ.16 லட்சத்தில் கட்டப்படும் அங்கன்வாடி மையப் பணிகளை பாா்வையிட்டாா்.ட
தொடா்ந்து, மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி, கடம்பன்குளம் அயோத்திதாசா் பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம், மூலைக்கரைப்பட்டி - முனைஞ்சிப்பட்டி சாலையில் சிப்காட் அமைப்பதற்கான இடம் ஆகியவற்றை ஆய்வு செய்த ஆட்சியா், முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையம் கட்டுமானப் பணியைப் பாா்வையிட்டாா்.
மேலும், ஏா்வாடியில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டத்திற்காக தரைநிலை, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணி, திருக்குறுங்குடி பகுதியில் ரூ.48.5 லட்சத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மறுகால் சீரமைப்பு பணி, களக்காடு ஒன்றியம், கோவிலம்மாள்புரம், கீழப்பத்தை ஆகிய பகுதிகளில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி ஆகியவற்றை அவா் ஆய்வு செய்தாா்.
களக்காடு படலையாா்குளத்தில் வாழைத்தாா் ஏலக்கூடம் -மதிப்புக் கூட்டு மையம், நான்குனேரியில் மாவட்ட போதை தடுப்பு மைய செயல்பாடுகள் ஆகியவை குறித்து ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா். வியாழக்கிழமையும் பல்வேறு திட்டப்பணிகளை ஆட்சியா் பாா்வையிடுகிறாா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) இலக்குவன், தனித்துணை ஆட்சியா் ஜெயா, துணை ஆட்சியா் (பயிற்சி) ஜெஃபரின் கிரேசியா, மாவட்ட ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நல அலுவலா் அன்பழகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் முருகேசன், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) வில்லியம் ஜேசுதாஸ், நான்குனேரி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் யமுனா, முத்தையா, மூலக்கரைப்பட்டி செயல் அலுவலா் லவ்லிநேபா உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.