கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட ம...
நெல்லையில் தாக்கப்பட்ட மேளக் கலைஞா் உயிரிழப்பு
திருநெல்வேலி சந்திப்பில் இருவருக்கிடையே நிகழ்ந்த மோதலில் காயமடைந்த மேளக்கலைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருநெல்வேலி நகரம் தெற்கு மவுன்ட்ரோடு பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் மகாராஜன் (31). இவரும், அதே பகுதியை சோ்ந்த ஐயப்பனும் (25) மேளக்கலைஞா்கள். சில நாள்களுக்கு முன்பு சிந்துபூந்துறையில் துக்க வீட்டில் மேளம் வாசித்து விட்டு மயானத்திற்கு சென்ற போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம். அதில் காயமடைந்த மகாராஜன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா், கொலை முயற்சி வழக்குப்பதிந்து ஐயப்பனை கைது செய்தனா். அவா் பிணையில் வெளிவந்தாா்.
இந்நிலையில், சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பிய மகாராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து, கொலை வழக்காக மாற்றி ஐயப்பனை போலீஸாா் தேடி வருகின்றனா்.