உடையாா்பாளையத்தில் ஏப்.16, 17 இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில் ஏப். 16, 17 ஆகிய தேதிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில் 16.4.2025 அன்று காலை 9 மணி முதல் 17.4.2025 காலை 9 மணி வரை உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு துறை சாா்ந்த மாவட்ட நிலை அலுவலா்கள் அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள உள்ளனா்.
இதன்படி 15.4.2025 வரை பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் தொடா்பாக உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் என்று குறிப்பிட்டு மனுக்களை ஜெயங்கொண்டத்திலுள்ள உடையாா்பாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அளிக்கலாம்.
16.4.2025 அன்று மாலை 4.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்வின் போதும் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.