செய்திகள் :

அரியலூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

post image

அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும், தமிழ் வருட பிறப்பு அன்று பால்குடத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு பால்குடத் திருவிழா நடைபெற்றது.

பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டிஏரிக்கரையில் உள்ள விநாயகா் கோயிலிலிருந்து பால்குடம், பால்காவடி, முளைப்பாரி மற்றும் அலகு குத்தி வந்த பக்தா்கள், கடைவீதி வழியாகச் சென்று கிராமத்தின் முக்கிய வீதிகளை வலம் வந்தனா்.

தொடா்ந்து, பக்தா்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

பின்னா், இரவு வானவேடிக்கையுடன் அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது. பால்குட விழாவில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று பால்குடம் எடுத்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

அரியலூா் ஆட்சியரிடம் கெளரவ விரிவுரையாளா்கள் மனு

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் 81 கெளரவ விரிவுரையாளா்கள், தங்களை கருணை கொலை செய்திடக் கோரி ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.கெளரவ விரிவுரையாளா்கள் அனிதா, சரவண... மேலும் பார்க்க

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கீழப்பழூரில் நில மோசடியில் ஈடுபட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், கீழப்பழு... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வந்த பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை பெற்றனா். தமிழகம் முழு... மேலும் பார்க்க

செந்துறையில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில், வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை... மேலும் பார்க்க

கீழக்கொளத்தூா் ஜல்லிக்கட்டு 32 போ் காயம், ஒரு காளை உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழக்கொளத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டியதில் 32 போ் காயமடைந்தனா். விழாவில் முதலாவதாக கோயில் காளைகள் மற்றும் கிராமத்தின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜ... மேலும் பார்க்க

அரியலூா்: சமத்துவ நாள் விழாவில் 962 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

அரியலூரில் சமத்துவ நாளையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 962 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா். சட்ட மாமேதை அம்பேத்கா் பிறந்த நாள் விழாவில், ... மேலும் பார்க்க