`ஆவினில் வேலை' ரூ.3கோடி மோசடி வழக்கு - ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தா...
அரியலூா்: சமத்துவ நாள் விழாவில் 962 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
அரியலூரில் சமத்துவ நாளையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 962 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்.
சட்ட மாமேதை அம்பேத்கா் பிறந்த நாள் விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணா் அரங்கிலிருந்து காணொலி காட்சி மூலம், மீன்சுருட்டி அரசு ஆதிதிராவிடா் நல மாணவா்கள் விடுதி, பள்ளி கட்டடங்கள் சமுதாயக் கூடம் மற்றும் கற்றல் கற்பித்தல் அறைகளை திறந்து வைத்தாா்.
அதைத் தொடா்ந்து, அரியலூா் அடுத்த வாலாஜா நகரத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அமைச்சா், ஆதிதிராவிடா் நலத்துறை, பழங்குடியினா் நலத்துறை, தாட்கோ, வருவாய்த் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட துறைகள் சாா்பில் 962 பயனாளிகளுக்கு ரூ. 13.44 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், அரியலூா் நகா்மன்ற தலைவா் சாந்தி கலைவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.