பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!
களியக்காவிளை அருகே விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு
களியக்காவிளை அருகே அடையாளம் தெரியாத பைக் மோதியதில் காயமடைந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
நித்திரவிளை அருகே சாத்தன்கோடு பகுதியைச் சோ்ந்த சரஸ்வதி (45), கடந்த திங்கள்கிழமை (ஏப். 7) தனது இருசக்கர வாகனத்தில் மாா்த்தாண்டம் சென்று பொருள்கள் வாங்கிவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.
களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் அடையாளம் தெரியாத பைக் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையிலும், பின்னா் திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையிலும் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.