புகையிலைப் பொருள்கள் விற்பனை: தக்கலை பகுதியில் 9 கடைகளுக்கு சீல்
தக்கலை பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 9 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா்.
தக்கலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் பிரவின் ரெகு, தக்கலை போலீஸாருடன் இணைந்து சோதனை மேற்கொண்டதில், 9 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, அக் கடைகளுக்கு சீல் வைத்ததுடன், தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
இதில் புலிப்பனம் அருகேயுள்ள ஒரு கடைக்கு ஏற்கெனவே அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததால், அக் கடைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.