தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலை வேண்டுமா?
புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு மற்றும் ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தில்லி மாநிலங்களின் கூட்டு முயற்சி நிறுவனமான தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 72 இளநிலை பொறியாளர் பணியாளர் பணியிடங்களுக்கு பொறியில் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். NCRTC/CO/HR/Rectt./O&M. 13/2025
பணி: Junior Engineer (Electrical)
காலியிடங்கள்: 16
தகுதி: பொறியில் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.22,800 - 75,850
வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Engineer (Electronics)
காலியிடங்கள்: 16
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.22,800 - 75,850
வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant (HR)
காலியிடங்கள்: 3
தகுதி: பிபிஏ, பிபிஎம் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,250 - 65,500
வயது வரம்பு : 25-க்குள் இருக்கவேண்டும்.
பணி: Junior Engineer (Mechanical)
காலியிடங்கள்: 3
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.22,800 - 75,850
வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Engineer (Civil)
காலியிடம்:1
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.22,800 - 75,850
வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Programing Associate
காலியிடங்கள்: 4
தகுதி: அறிவியல், ஐடி, கம்பியூட்டர் அப்ளிகேசன் போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.22,800 - 75,850
வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant (Corporate Hospitality)
காலியிடம்:1
தகுதி: உணவக மேலாண்மை பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,250 - 65,500
வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Maintainer (Electrical,Mechanical)
காலியிடங்கள் : 28
தகுதி: எலக்ட்ரிஷியன், எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், மெக்கானிக்கல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,250 - 59.200
வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் முக்கிய பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் எழுத்துத்தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினரும் ரூ.1,000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ncrtc.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.4.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.