செய்திகள் :

கடற்படையில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மருத்துவ உதவியாளர் பணி

post image

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக மருத்துவ உதவியாளர் பணியிடங்களு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

பணி: Sailors (SSR Medical) 02.2025/26 பிரிவு

சம்பளம்: மாதம் ரூ. 21,700 - 69,100

தகுதி : கணிதம். இயற்பியல், வேதியியல், உயிரி யல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது பிளஸ் 2 இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 1.9.2024-க்கும் 29.2.2008-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: இந்திய கடற்படையால் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் INET (Indian Navy Entrance Test) மற்றும் உடற்தகுதி. உடற்திறன் தேர்வுகள், மருத் துவத்தகுதித் தேர்வின் அடிப்படை யில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர்.

உரத்தொழிற்சாலையில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

உயரம் : குறைந்தபட்சம் 157 செ.மீ. இருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உடற்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

உடற்திறன் தேர்வு: 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 6½ நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 20 Squats, 15 Pushups, 15 Sit ups எடுக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வில் ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு பாடங்களிலிருந்து கொள்குறி வகை கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வு மற்றும் இதர தேர்வுகள் மே மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும். இது குறித்து விபரம் அட்மிட் கார்டு மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். எழுத்துத்தேர்வு மற்றும் இதர தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒடிசா மாநிலத்திலுள்ள Chilka கடற்படை பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்படும். பின்னர் பணி வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.60 மட்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.4.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலை வேண்டுமா?

புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு மற்றும் ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தில்லி மாநிலங்களின் கூட்டு முயற்சி நிறுவனமான தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 7... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்திய பொதுத்துறை விண்வெளி மற்றும் பாதுகாப்பு மின்னணு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் உதவியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு ஐட... மேலும் பார்க்க

உரத்தொழிற்சாலையில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

தேசிய உரத்தொழிற்சாலையின்கீழ் செயல்படும் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்ப... மேலும் பார்க்க

சேலம் அரசு ஐடிஐயில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு

சேலம்: சேலம் அரசு ஐடிஐயில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: சேலம் அரசு ஐடிஐயில் கடிகார பழுது நீக்கம் தொடா்பா... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 417 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா் மற்றும் அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்... மேலும் பார்க்க

அங்கன்வாடி பணியாளா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள் அங்கன்வாடி பணியாளா், உதவியாளா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வ... மேலும் பார்க்க