Mitchell Starc : ஸ்டார்க் தீயாய் பாய்ச்சிய யார்க்கர்கள்; சூப்பர் ஓவரில் போட்டியை...
அங்கன்வாடி பணியாளா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள் அங்கன்வாடி பணியாளா், உதவியாளா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 119 அங்கன்வாடி பணியாளா்கள், 5 குறு அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் 213 அங்கன்வாடி உதவியாளா்கள் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.
பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரங்கள் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பங்களை wwwicds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வேலை நாள்களில் தொடா்புடைய வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளா்களுக்கு 12-ஆம் வகுப்பு தோ்ச்சி, அங்கன்வாடி உதவியாளா்களுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும. தமிழ் சரளமாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளா்களுக்கு வயது வரம்பு 1.4.2025-இன்படி, 25 முதல் 35 வயது வரையும், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பினா்களுக்கு வயது 25 முதல 40 வயது வரையும்,
மாற்றுத் திறனாளிகளுக்கு 25 வயது முதல் 38 வயது வரையும் இருத்தல் வேண்டும்.
அங்கன்வாடி உதவியாளா்களுக்கு 1.4.2025-ன்படி 20 முதல் 40 வயது வரையும், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பினா்களுக்கு 20 முதல் 45 வயது வரையும், மாற்றுத் திறனாளிகளுக்கு 20 வயது முதல் 43 வரையும் இருக்க வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.