செய்திகள் :

Mitchell Starc : ஸ்டார்க் தீயாய் பாய்ச்சிய யார்க்கர்கள்; சூப்பர் ஓவரில் போட்டியை இழந்த ராஜஸ்தான்

post image

'யார்க்கரின் பலன்!'

'ஒரு பௌலர் சரியாக குறிவைத்து நல்ல யார்க்கரை வீசினால் என்னாலும் அதை அடிக்க முடியாது. அதேநேரத்தில் ஒரு பௌலரால் எப்போதுமே துல்லியமான யார்க்கர்களை வீச முடியாது. அவர்கள் தவறுவிடும்போது நான் அதை சிக்சராக்கிவிடுவேன்.' யார்க்கர்களை பற்றி தோனி ஒரு முறை இப்படி பேசியிருந்தார்.

Starc
Starc

டெல்லிக்கும் ராஜஸ்தானுக்கும் இடையே நடந்து முடிந்திருக்கும் போட்டியை தோனியின் இந்த கூற்றுக்குள் பொருத்திப் பார்க்கலாம். டெல்லியின் கையை விட்டுச் சென்ற போட்டியை தனது துல்லியமான யார்க்கர்களின் வழி ஸ்டார்க் மீட்டுக் கொடுத்து சூப்பர் ஓவர் வரை அழைத்து சென்று அணியை வெல்ல வைத்திருக்கிறார்.

'டெத் ஓவர் திரில்லர்!'

ராஜஸ்தானுக்கு 189 ரன்கள்தான் டார்கெட். இந்த டெல்லி மைதானத்தில் இது எட்டக்கூடிய ஸ்கோர்தான். ராஜஸ்தானும் நன்றாகவே தொடங்கியது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால் - சாம்சன் ஓப்பனிங் கூட்டணியே 61 ரன்களை சேர்த்திருந்தது. பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் சாம்சன் ரிட்டையர் ஹர்ட் ஆகியிருந்தார். பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் 63 ரன்களை எடுத்திருந்தது. மிடில் ஓவர்களில் நிதிஷ் ராணா நன்றாக ஆடியிருந்தார்.

Starc
Starc

180+ ஸ்ட்ரைக் ரேட்டில் அரைசதத்தை கடந்திருந்தார். கடைசி 3 ஓவர்களில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. 18 வது ஓவரை ஸ்டார்க் வீசினார். அந்த ஓவரில் 8 ரன்களை மட்டுமே கொடுத்தார். மேலும், ஒரு துல்லியமான யார்க்கரில் அதிரடியாக செட்டில் ஆகி நின்ற நிதிஷ் ராணாவையும் Lbw ஆக்கினார். மோகித் சர்மா வீசிய அடுத்த ஓவரில் 14 ரன்கள் சென்றது. கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது.

க்ரீஸில் துருவ் ஜூரேலும் ஹெட்மயரும் நின்றனர். இருவருமே அதிரடியாக ஆடக்கூடியவர்கள். கடைசி ஓவரில் பந்து ஸ்டார்க்கின் கையில் சென்றது. ஸ்டார்க் செய்தது மிரட்டலான சம்பவம். சராசரியாக 140 கி.மீ வேகத்தில் நல்ல யார்க்கர்களை வீச வேண்டும் என்பதுதான் ஸ்டார்க்கின் திட்டம். அந்தத் திட்டத்தை சரியாக செயல்படுத்தினார். டெத் ஓவர்களில் இப்போது ஒயிட் அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் டெலிவரிக்களை கொஞ்சம் தற்காப்பாக வீசுவதுதான் வேகப்பந்து வீச்சாளர்களின் திட்டமாக இருக்கிறது.

Starc
Starc

'ஸ்டார்க்கின் யார்க்கர் திட்டம்!'

ராஜஸ்தான் பந்துவீசிய போது 20 வது ஓவரில் சந்தீப் சர்மா அதை செய்ய முயன்றுதான் 4 ஒயிடுகளை வீசி அந்த ஓவரில் மட்டும் 11 பந்துகளை வீசியிருந்தார். சந்தீப் சர்மா கொடுத்த அந்த எக்ஸ்ட்ராக்களும் ராஜஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஸ்டார்க் அந்த ஒயிடு ஆப் ஸ்டம்ப் டெலிவரிக்களை முதல் ஆப்சனாக வைத்துக் கொள்ளவில்லை. அட்டாக்கிங்காக வீசவே நினைத்தார்.

Mitchell Starc
Starc

வீசிய 6 பந்துகளில் 4 பந்துகள் துல்லியமான யார்க்கர்கள். இரண்டு பந்துகளை கொஞ்சம் ஃபுல்லாக வீசியிருந்தார். 140+ வேகத்தில் 4 பந்துகளை துல்லியமான யார்க்கர்களாக மாற்றியதால் ஹெட்மயராலும் துருவ் ஜூரேலாலும் பவுண்டரியே அடிக்க முடியவில்லை. குறிப்பாக, கடைசி பந்துக்கு சரியாக பீல்ட் செட்டப் வைத்து துருவ் ஜூரேலின் பாதத்துக்குள் யார்க்கரை இறக்கினார். கடைசிப் பந்தில் ராஜஸ்தானுக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது.

டீப் ஃபைன், டீப் ஸ்கொயர், டீப் மிட், லாங் ஆன் என லெக் சைடில் மட்டும் 4 பீல்டர்களை நிறுத்தி வீரியமாக லெக் ஸ்டம்ப் லைனில் ஒரு யார்க்கரை இறக்கினார். பவுண்டரி அடிக்க வாய்ப்பே இல்லாத பந்து. இரண்டு ரன்களுக்கு முயன்று துருவ் ஜூரேல் ரன் அவுட். போட்டி டை ஆனது. சூப்பர் ஓவருக்கு சென்றது.

'சூப்பர் ஓவர் சுவாரஸ்யம்!'

சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய அங்கேயும் ஸ்டார்க்தான் வீசினார். அந்த 20 வது ஓவர் அளவுக்கு சூப்பர் ஓவரில் துல்லியமான யார்க்கர்களை ஸ்டார்க்கால் வீச முடியவில்லை. ஆனாலும், ராஜஸ்தானால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை. இந்த ஓவரில் நோ - பாலுக்கு ப்ரீ ஹிட்டோடு சேர்த்து 6 பந்துகளை ஸ்டார்க் வீசியிருந்தார். ஐந்துமே யார்க்கராக வீச நினைத்த பந்துகள்தான்.

Starc
Starc

அதில் இரண்டு பந்துகள் லோ ஃபுல் டாஸாகவும் ஒரு பந்து ஸ்லாட்டிலுமாக விழுந்தது. இந்த மூன்று பந்தில்தான் ராஜஸ்தான் அணி 12 ரன்களை சேர்த்தது. 2 விக்கெட்டுகளையும் ரன் அவுட்டில் விட்டதால் ஒரு பந்தை மீதம் வைத்தே சூப்பர் ஓவரை முடித்துக் கொண்டது ராஜஸ்தான்.

ராஜஸ்தான் அணியின் சார்பில் சந்தீப் சர்மா சூப்பர் ஓவரை வீசியிருந்தார். சூப்பர் ஓவரில் பந்துவீசிய சந்தீப்பையும் ஸ்டார்க்கையும் ஒப்பிட்டால் இருவரும் நீரும் நெருப்பும் போல வெவ்வேறு திசைகளில் இருந்தனர்.

ஸ்டார்க் 140+ வேகத்தில் யார்க்கர்களாக வீச முயற்சிக்க சந்தீப் சர்மாவோ 120 கி.மீ க்கும் கீழான ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களை வீச நினைத்தார். ஆனால், இந்த வகை பந்துகள் அத்தனை அபாயமாக இல்லை. ராகுல் ஒரு பந்தை பேக்வர்ட் பாய்ண்ட்டில் பவுண்டரி அடித்து விட்டார். ஸ்டப்ஸ் ஒரு பந்தை மடக்கி லெக் சைடில் சிக்சராக்கிவிட்டார். போட்டி முடிந்தது. டெல்லி வெற்றி.

Starc
Starc

ஸ்டார்க் அட்டாக்கிங்காக கையில் எடுத்த யார்க்கர் எனும் ஆயுதத்தால் கையிலிருந்த போட்டியை ராஜஸ்தான் இழந்திருக்கிறது.

Preity Zinta: ``19 வயது வீரராக முதல் சந்திப்பு; இன்றுவரை ரசிகை..'' - சஹல் குறித்து ப்ரீத்தி ஜிந்தா

IPL, பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹலை முதன்முறையாக சந்தித்தது பற்றி மனம் நெகிழும் வகையில் பகிர்ந்துள்ளார்.எப்போதுமே சஹலின் ரசிகை... மேலும் பார்க்க

Rohit Sharma : '6 போட்டிகளில் 82 ரன்கள் மட்டுமே...' - எப்போதான் ரன் அடிப்பீங்க ஹிட் மேன்?

'தடுமாறும் ரோஹித்!'மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தது. இப்போது தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு போட்டிகளை வென்று கம்பேக் கொடுத்திருக்கிறது. ஆனால், அந்த அணியின் முக்கிய வீரரான ... மேலும் பார்க்க

MI vs SRH : 'ஸ்டம்புக்கு முன்னே கையை விட்ட கீப்பர் க்ளாசென்' - வினோத `No Ball' கொடுத்த நடுவர்

'மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ்!'மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் நடுவர் கொஞ்சம் வித்தியாசமான பிழைக்காக ந... மேலும் பார்க்க

Dhoni: "தோனி என்னை மரியா ஷரபோவா என்று அழைப்பார்; ஏனெனில்..!" - நினைவுகள் பகிரும் மோஹித் சர்மா

ஐபிஎல்லில் ஒவ்வொரு சீசனிலும் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை இதுவரை வென்ற 9 இந்தியர்களில் மோஹித் சர்மாவும் ஒருவர். 2013-ல் சி.எஸ்.கே அணியில் தனது பயணத்தைத் தொடங்கிய மோஹ... மேலும் பார்க்க

Nitish Rana: "DC-க்கெதிரான சூப்பர் ஓவரில் ஏன் களமிறங்கவில்லை" - நிதிஷ் ராணா விளக்கம்!

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்ற டெல்லி Vs ராஜஸ்தான் போட்டி டிராவில் முடிய, சூப்பர் ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி பெற்றது.முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில்... மேலும் பார்க்க

Chahal : `அவனுக்கு பயமில்ல அதுதான் அவன் பலம்' சஹாலை அதிகம் கொண்டாட வேண்டும்' - ஏன் தெரியுமா?

'பஞ்சாபின் அசாதாரண வெற்றி!'ஐ.பி.எல் வரலாற்றிலேயே மிகச்சிறந்த டிஃபண்டை செய்து காண்பித்திருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். யுஸ்வேந்திர சஹாலின் ஆகச்சிறந்த பௌலிங்கினால் மட்டுமே பஞ்சாப் அணியால் இதை சாத்திக்க முடிந... மேலும் பார்க்க