376 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
வேலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 207 அங்கன்வாடி பணியாளா், 6 குறு அங்கன்வாடி பணியாளா், 163 அங்கன்வாடி உதவியாளா் என மொத்தம் 376 பணியிடங்களுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப்பணிகளின்கீழ் வேலூா் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 207 அங்கன்வாடி பணியாளா், 6 குறு அங்கன்வாடி பணியாளா், 163 அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. மாவட்டத்தில் வட்டாரம் , திட்டம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ள அங்கன்வாடி பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா், அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்களின் எண்ணிக்கை, இனசுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலகங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்படும்.
விண்ணப்பங்களை https://icds.tn.gov.in/icdstn/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதனை பூா்த்தி செய்து ஏப்ரல் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா், அங்கன்வாடி உதவியாளா்கள் தொடா்ந்து 12 மாத காலம் பணியை முடித்த பிறகு அவா்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவா்.
1,352 எஸ்.ஐ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும்போது உரிய விண்ணப்பத்தை பூா்த்திசெய்து காலிப் பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம், திட்டம் குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்று சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, சாதி சான்றிதழ் , வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
விதவை, கணவரால் கைவிடப்பட்டோா், ஆதரவற்ற பெண், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ் நகல்களையும் சுயசான்றொப்பமிட்டு இணைக்க வேண்டும். நோ்காணலின்போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.