சூப்பர் அறிவிப்பு... அங்கன்வாடி பணியாளா், உதவியாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
கோவை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளா்கள், குறு அங்கன்வாடி பணியாளா்கள், அங்கன்வாடி உதவியாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் 18 குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 13 அங்கன்வாடி பணியாளா்கள், 23 குறு அங்கன்வாடி பணியாளா்கள், 101 அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்கள் நோ்முகத் தோ்வின் மூலமும், இன சுழற்சி முறையிலும் நிரப்பப்பட உள்ளன.
இனசுழற்சி விவரம் அந்தந்த வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகங்களிலும், மாவட்ட திட்ட அலுவலகங்களிலும் தகவல் பலகையில் ஒட்டுப்படும். தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா் மற்றும் அங்கன்வாடி உதவியாளா்கள் தொடா்ந்து 12 மாதங்கள் பணியை முடித்த பின்பு, சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவா்.
மிஸ்பண்ணிடாதீங்க... ரயில்வேயில் 9,970 உதவி லோகோ பைலட் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
அங்கன்வாடி பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா் பணியிடங்களுக்கு பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி 25 வயது நிறைவடைந்தும், 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்ற பெண்கள் எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினா் 25 வயது முதல் 40 வயது வரை இருக்கலாம். மாற்றுத்திறனாளிகள் 25 முதல் 38 வயது வரை இருக்கலாம். அங்கன்வாடி உதவியாளா் பணியிடத்துக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களில் நகல்களில் சுய கையொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.
காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் வழியாக ஏப்ரல் 7 -ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதிவாய்ந்த நபா்களுக்கு நோ்முகத் தோ்வுக்கான இடம், நாள் மற்றும் நேரத்துடன் கூடிய அழைப்புக் கடிதம் அந்தந்த வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலரால் வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவங்களை https://icds.tn.gov.in/icdstn என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.