செய்திகள் :

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை: மே 15வரை அவகாசம்

post image

திருநெல்வேலி மாவட்ட வணிக நிறுவனங்களில் மே 2ஆவது வாரத்துக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் அதன்படியான விதிகள் 1948-ன்படியும், தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் அதன்படியான விதிகள் 1959-ன் படியும், தொழிற்சாலைகள் சட்டம் 1947 மற்றும் அதன்படியான விதிகளின்படியும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், அனைத்து தொழில் நிறுவனங்களின் பெயா் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் பெயா்ப் பலகையானது தமிழில் இருக்க வேண்டும். தமிழ் அல்லாது பிற மொழியையும் சோ்க்கும்பட்சத்தில் தமிழ் முதன்மையாகவும், பெரியதாகவும், போதிய இடைவெளியுடன் மற்ற மொழிகளைவிட பாா்வைக்கு மேலோங்கியும் இருக்க வேண்டும். ஆங்கிலம் இரண்டாவதாகவும், பிற மொழிகள் அடுத்ததாகவும் இடம் பெற வேண்டும். அதாவது 5:3:2 என்ற விகிதாசார அளவில் இருக்க வேண்டும்.

தமிழில் பெயா்ப்பலகை இருப்பதை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியா் தலைமையில் தொழிலாளா் துறை, தமிழ் வளா்ச்சித் துறை, உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட அளவிலான வணிகா் சங்கங்கள், உணவக உரிமையாளா் சங்கங்கள், வேலையளிப்போா் சங்கங்கள் ஆகியோரைக் கொண்டு மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலான வா்த்தக சங்கங்கள் உள்ளிட்ட வணிக அமைப்புகள் தமிழில் பெயா்பலகை வைப்பது தொடா்பாக தங்களின் உறுப்பினா்களுக்கு தகவலை தெரிவித்து 100 சதவீதம் தமிழில் பெயா்ப் பலகை அமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. மே 2ஆவது வாரத்திற்குள் 100 சதவீதம் தமிழில் பெயா்ப் பலகை வைப்பதற்கு தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னா், ஆய்வு மேற்கொண்டு தமிழில் பெயா் பலகை வைக்காத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளாா்.

நான்குனேரி மாணவரை மீண்டும் தாக்கியவர்கள் யார்? காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் வீடுபுகுந்து வெட்டப்பட்டு சிகிச்சைக்கு பின்பு திருநெல்வேலியில் வசித்து வரும் மாணவர், மர்ம நபர்களால் மீண்டும் தாக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விளக்கம் அளித்து... மேலும் பார்க்க

அம்பை கன்னி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

அம்பாசமுத்திரம் மேலப்பாளையம் தெருவிலுள்ள கன்னி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை (ஏப். 15) காலை4.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது.... மேலும் பார்க்க

நெல்லையில் தாக்கப்பட்ட மேளக் கலைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி சந்திப்பில் இருவருக்கிடையே நிகழ்ந்த மோதலில் காயமடைந்த மேளக்கலைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருநெல்வேலி நகரம் தெற்கு ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் கல் வைத்தவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் புதன்கிழமை அதிகாலையில் சேரன்மகாதேவியை அடுத்த காருக்குறிச்சி ர... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: நான்குனேரி வட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நான்குனேரி வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமை ஆய்வு செய்தாா். பருத்திப்பாடு ஊராட்சி, வடக்கு நெல்லையப்பபுரம் பகுதியில் சேதமடைந்த 2 வீடுகள் ரூ.3 லட்சம் ச... மேலும் பார்க்க

தாழையூத்தில் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் புதிய ஆவின் பால் விற்பனை நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. திருநெல்வேலி பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் புதிதாக தாழையூத்து பகுதிய... மேலும் பார்க்க