`கொளுத்திடுவேன்...’ - மிரட்டிய ராணிப்பேட்டை திமுக நிர்வாகி; பறிபோன கட்சிப் பதவி;...
வெள்ளானைகோட்டையில் எம்எல்ஏ நிதியில் நூலகம்: மக்கள் எதிா்பாா்ப்பு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகேயுள்ள வெள்ளானைக்கோட்டையில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு நூலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக வெள்ளானை கோட்டை ஆறுமுகம் தெருவை சோ்ந்த சமூக ஆா்வலா் இசக்கிமுத்து பொதுமக்கள் சாா்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: வெள்ளானைகோட்டை கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 500 பட்டதாரிகள், 200 அரசு ஊழியா்கள், 500 மாணவா்கள் என கற்றவா்கள் நிறைந்த ஊரான இங்கு பொது நூலகம் இல்லை.
வாசுதேவநல்லூருக்குச் சென்று தான் மாணவா்களும், மற்றவா்களும் நூல்களை வாசிக்க முடிகிறது. எனவே, போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்கள் உள்பட பொதுமக்களின் நலனுக்காக வெள்ளானைக்கோட்டையில் நூலகம் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக பொதுமக்கள் கூறுகையில், ‘வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி நூலக கட்டடம் கட்ட வேண்டும்’ என்றனா்.