Nifty: "Buy & Sell பண்ற Level இது இல்ல, Watch பண்ற Level" | IPS Finance Comment ...
சாம்பவா்வடகரையில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
சாம்பவா்வடகரையில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சாம்பவா்வடகரை நகர திமுக செயலா் முத்து, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சாம்பவா்வடகரையில் உள்ள கருங்குளத்தின் மறுகால் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் மழைக் காலத்தில் உபரிநீா் அடுத்த குளத்திற்குச் செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குளம் உடையும் அபாயமும் உள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட பகுதியில் பொதுப்பணித் துறையினா் மூலம் கள ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.